பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

எர்வினியாஅழுகல்

தாக்குதலின் அறிகுறிகள்:
  • இந்தநோய்யானது இளம்கன்றுகளிலில் வேர்களில் அழுகளும் மற்றும் கெட்டநாற்றத்தைய்ம் வெளிப்படுத்துகிறது.
  • வாழையின் உச்சிப்பகுதியில் உள்ள இலைகள் திடீரென காய்ந்துடும்.
  • ரொபஸ்டா, கிராண்ட்நைன் மற்றும் தெல்லசக்கரகெலி போன்ற ரகங்களில் இவை பொதுவாக தொற்றை ஏற்ப்படுத்துகிறது.
  • நோயின் ஆரம்பநிலையில் கரும்பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீரில் ஊறிய பகுதிகள் புறணிபகுதியில் கணப்படும்
  • இந்த மென்மையான அழுகியப்பகுதி வளரும் பகுதியை நோக்கி பரவுகிறது, இத கிழங்குப்பகுதி துர்நாற்றத்தை வெளியேற்றுகிறது.
       
  கழுத்துப்பகுதியில் அழுகிய நிலை   மஞ்சள் நிற நீரில் ஊறிய பகுதிகள்   போலித்தண்டுல் கீறல்கள்   இலைகள் திடீரென உலர்ந்து போதல்
       
       
கட்டுப்படுத்தும் முறை:
  • நல்ல வடிகால் மற்றும் மண் சீரமைப்பினால் ஓரளவிற்கு நோயை கட்டுப்படுத்த முடியும்.
  • நோய் தொற்று ஏற்ப்படாத பக்கக்கன்றுகளை நடவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட கன்றுகளை உடனடியாக நீக்க வேண்டும்.
  • இறந்த மத்தியமொட்டுகள் மற்றும் செயலில் பக்கவாட்டு மொட்டுகள் கொண்ட வேர்த்தண்டுக் கிழங்குகளை பயன்படுத்தி நோய் தோற்றத்தை குறைக்க முடியும்.
  • மழைக்காலதில் கன்றுகளை நடவு செய்வதை தவிர்க்கவேண்டும் மற்றும் பெரியபக்கக்கன்றுகளை (மேற்பட்ட 500 கிராம்) பயன்படுத்தி நடவு செய்யவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015